Greek voters head to polls for key election amid austerity crisis!

Athens, Greece Voters in Greece headed to the polls Sunday to take part in parliamentary elections amid......

scence
மேலும்
scence
மேலும்
Powered by Blogger.

Sunday, May 20, 2012

வாயில் முத்தமிட முயன்ற ஊடகவியலாளரை அறைந்த வில்ஸ்மித்.


 Hollywood திரையுலகில் மிகவும் பிரபல நடிகரான வில்ஸ்மித் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் மென் இன் பிளக்3 (Men in Black3) இன் முதல் நாள் திரையிடல் நேற்று 18-05-2012 வெள்ளிக்கிழமை ரஸ்ய தலைநகரான மொஸ்கோவில் நடைபெற்றது.

இந்த திரையிடலில் திரைப்படத்தின் நாயகனான வில்ஸ்மித் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவிளலாளர்களுடனும் வரவேற்பு கைலாகு சொய்து கொண்டனர். இதில் உக்கிரெய்ன் நாட்டைச் சேர்ந்த ஊடக வியலாளர் ஒருவர் வில்ஸ்மித்தின் வாயில் முத்தமிட முயன்றுள்ளார். கோபம் கொண்ட வில்ஸ்மித் அவரை தள்ளிவிட்டு கன்னத்தில் அறையும் கொடுத்தார். இது தொடர்வில் பத்திரிகையாளர்களிடமும் ரசிகர்களிடமும் வில்ஸ்மித் பேசுகையில் "அவன் எனது வாயில் முத்தமிட முயன்றான் அதனால் தான் அறைந்தேன் அவனின் நல்ல வேளை நான் அவனின் மூக்கை உடைக்கவில்லை" என்று தெரிவித்தார்.


வில்ஸ்மித் அவர் ரசிகர்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் நட்பாகவே நடந்து கொள்பவர் இது அனைவரும் அறிந்த விடையம் அதனால் இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த ரசிகர்கள் அவர் கோபம் குறித்து புரிந்து கொண்டனர்.

ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட ஒரே பால் திருமணத்திற்கான ஆதரவிற்கு கடந்த வாரம் வில்ஸமித்தும் ஆதரவாக 'கடினமான இந்த வாழ்க்கைச் சூழலில் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பது எந்த வகையில் இருந்தாலும் அதற்கு நான் ஆதரவளிக்கின்றேன்" என கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே இந்த சம்பவத்தின் ஊடாக உக்கிறேன் தொலைக்காட்சியின் ஊடகவிலாளரான Vitalii Sediukம் பிரபலம் அடைந்தது மட்டுமல்லாமல் Men in Black3 திரைப்படத்திற்கு விளம்பரத்தையும் தேடித் தந்துள்ளது.

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....!


நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
 
1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
 
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

நடிகர் ராம் சரண் திருமணம்: திருப்பதி கோவிலில் அழைப்பிதழ் வைத்து சிரஞ்சீவி மனைவி வழிபாடு.


காங்கிரஸ் எம்.பி.யும் நடிகருமான சிரஞ்சீவி மகன் ராம் சரண். இவரும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். ராம் சரனுக்கும் அப்பல்லோ மருத்துவமனை சேர்மன் பிரதாப் ரெட்டி பேத்தி உபாஷனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14-ந்தேதி இவர்களது திருமணம் நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை சிரஞ்சீவி குடும்பத்தினர் பிரமாண்டமாக செய்து வருகிறார்கள்.

திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விட்டது. திருமண அழைப்பிதழுடன் சிரஞ்சீவி மனைவி சுரேகா நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அர்ச்சகர் மூலம் ஏழுமலையான் பாதத்தில் அழைப்பிதழ் வைத்து வழிபட்டார். பின்னர் பத்திரிகையை உண்டியலில் போட்டார்.

இதேபோல் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்றும் அவர் வழிபட்டார். தாயாருக்கு பட்டு புடவை சாத்தினார். முன்னதாக விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கா கோவிலுக்கும் சுரேகா சென்று திருமண அழைப்பிதழ் வைத்து வழிபட்டார்.

இது பற்றி சுரேகா கூறும்போது, ஏழுமலையான் சன்னதியில் திருமண அழைப்பிதழ் வைத்து வழிபட்டேன். முதலில் தெய்வத்தின் ஆசி பெற்ற பிறகு மற்றவர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார்.

சுரேகாவுடன் அவரது தங்கை வசுந்தரா சென்று இருந்தார்.

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.


'நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.

``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. 'செல்போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ... என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர் 'ரெக்கவரி சாஃப்ட்வேர்
(recovery software) .

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

''செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட்டும் செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல 'ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான 'ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்... ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் 'வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்... உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.
தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்.
உஷாருப்பா.. உஷாரு........ இதுக்கு மேலேயும் வீடியோ அல்லது போடோ எடுப்பீங்க.....??

சரத் பொன்சேகா விடுதலை தொடர்பாக வெளிவரும் முரணான தகவல்கள்.


முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா விடுதலை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ எழுத்து மூல அறிவிப்பு இன்று சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஒரு சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சரத்பொன்சேகா மீதான ஆயுதக் கொள்வனவு உடன்படிக்கை தொடர்பான வழக்கில் 30 மாத கால தண்டனை கடந்த மாதம் முடிவடைந்தது. அவர் தற்போது வெள்ளைக் கொடி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவித்து வருகின்றார்.

இந்த நிலையில் சரத் பொன்சேகாவை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய டிரான் அலஸ் ஜனாதிபதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடாத்தி வந்தார். இதன் உச்ச கட்டமாக சரத் பொன்சேகாவின் பாரியார் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதிஇ சரத் பொன்சேகாவை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படுவார் என்ற செய்தி வெளியானதை அடுத்து சரத் பொன்சேகாவின் புதல்விகளான அப்சரா பொன்சேகாஇ அபர்ணா பொன்சேகா ஆகியோர் அமெரிக்காவிலிருந்து இன்று 20 ஆம் திகதி அல்லது நாளை 21 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு விசாரணையிலுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை தமது தேர்தல் நடவடிக்கைகளுக்கு உதவியாக வைத்திருந்தது தொடர்பாகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் சரத் பொன்சேகா மான நஷ்ட ஈட்டு வழக்குத் தொடரக் கூடிய சாத்தியம் உள்ளதா எனவும் அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.

எப்படியிருந்தும் சரத் பொன்சேகா இவ் வாரத்துக்குள் விடுதலை செய்யப்படுவார் என உறுதியாக கூறலாம் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ் பல்கலைக் கழகத்தைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில்.


யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தினைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தரித்த பொலிஸார் அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் யாழ். பல்கலைக் கழகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களின் மாணவ மாணவிகள் பெரும் பதட்டத்தின் மத்தியிலேயே தங்களுடைய கற்றல் செயற் பாட்டினை மேற் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக் கிழமை யாழ். பல்கலைக் கழக மாணவ ஒன்றியத்தின் செயலாளர் இனம் தெரியாத நபர்களினால் கடுமையாக தாக்கப்பட்டதன் பின்னணியிலேயே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னி போரின் போது படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் நினைவு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இதனைத் தடுக்கும் நடவடிக்கையாகவே இந்த மாணவன் தாக்கப்பட்டதாக சக மாணவர்கள் கூறுகின்றனர்.

மாணவன் தாக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் துணை வேந்தரின் காரியாலயம் உட்பட பல்கலைக் கழகத்தின் பல பெறுமதியான உடைமைகளையும் அடித்து நொருக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெல்லியில் அடையாளம் தெரியாத 1000 பிணங்கள் மீட்பு.


டெல்லியில் இந்த ஆண்டு 1000க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தெற்கு டெல்லியில் ராணுவ காலனி அருகே நேற்றுமுன்தினம் கிடந்த பையில் துண்டு துண்டாக வெட்டிய நிலையில் ஆண் உடல் இருந்தது.

இதுபோல மத்திய டெல்லியில் பிரசாத் நகரில் கிடந்த பையில் முற்றிலும் அழுகிப் போன நிலையில் வாலிபர் உடல் இருந்தது. இவற்றோடு சேர்த்து இந்தாண்டு மட்டும் 1,012 அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 3,337 அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது.

வடக்கு டெல்லியில் தான் அதிக சடலங்கள் கிடந்துள்ளன. அங்கு 245 பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய டெல்லியில் 116, வடகிழக்கு டெல்லியில் 68, கிழக்கு 60, மேற்கு 56, வடமேற்கு 55, தெற்கு 48, புதுடெல்லியில் 31, தென்மேற்கு 28 என்ற எண்ணிக்கையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அருகே உள்ள மாநிலங்களில் கொலை செய்யப்படும் நபர்களின் உடல்களை டெல்லியில் வந்து போட்டுவிடுவதாக போலீசார் கூறுகின்றனர். இது குறித்து கவலை தெரிவித்துள்ள முதல்வர் ஷீலா தீட்சித், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...
scence
மேலும்
scence
மேலும்
 
Copyright © 2012. Website Design